மெர்சல்’ ரிலீஸுக்காக பழனிசாமி இல்லத்துக்கு ஊர்ந்து வந்தவர் விஜய்: தவெகவுக்கு அதிமுக பதிலடி
மெர்சல்’ ரிலீஸுக்காக பழனிசாமி இல்லத்துக்கு ஊர்ந்து வந்தவர் விஜய்: தவெகவுக்கு அதிமுக பதிலடி

மெர்சல்’ ரிலீஸுக்காக பழனிசாமி இல்லத்துக்கு ஊர்ந்து வந்தவர் விஜய்: தவெகவுக்கு அதிமுக பதிலடி
சென்னை: ‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. அவ்வளவு தில் இருந்தால், 'மெர்சல்', 'மாஸ்டர்' படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
கருத்துகள் (0)