இலுப்பூர், பாப்பான்களம் பகுதியைச் சேர்ந்த சேகருக்குச் சொந்தமான கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், மயிலை பத்திரமாக மீட்டெடுத்து காட்டுப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.