சென்னை எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் எழும்பூரிலிருந்து நாளையும் (19-ந் தேதி), மங்களூரிலிருந்து 21-ந் தேதியும் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். இதேபோல், சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எழும்பூரிலிருந்து 19, 20 ஆகிய தேதிகளிலும், தஞ்சாவூரிலிருந்து 20, 21 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.